பிரபல குணசித்திர நடிகர் காலமானார். சோகத்தில் திரையுலகம்

பிரபல குணசித்திர நடிகர் காலமானார். சோகத்தில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவரும், மேடை நாடகக் கலைஞருமானா பாலா சிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67.

நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்' படத்தில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் பாலாசிங் அதன் பின்னர் `புதுப்பேட்டை', `விருமாண்டி' இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, உள்பட பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலாசிங் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 1 மணி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே' படத்தில் பாலாசிங் நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாலாசிங் மறைவால் தமிழ் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது