ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசன் ... !

ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசன் ... !

'பாணா காத்தாடி'மற்றும் 'செம போத ஆகாதே' ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் தனது அடுத்த படத்துக்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் நாயகனாக ரியோவும், நாயகியாக ரம்யா நம்பீசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பால சரவணன், ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது முழுக்க பயணப் பின்னணியில் நடைபெறும் கதையாகும்.

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துக்குப் பிறகு ரியோ நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும்.