கார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர் சூர்யா

கார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர் சூர்யா
கார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர் சூர்யா

சென்னை: நடிகர் சூர்யா ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார்.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'தம்பி' என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தம்பி என்று பெயர் வைத்து இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.