'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது

'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது
'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது


ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரதன் இசையமைத்திருந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி  பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.
*
'Sila Nerangalil Sila Manidhargal', the 2022 acclaimed film produced by AR Entertainment and Trident Arts is all set for a grand theatrical re-release

PVR Cinemas will be releasing 'Sila Nerangalil Sila Manidhargal' across Tamil Nadu on September 19


'Sila Nerangalil Sila Manidhargal' produced by AR Entertainment and Trident Arts, which was released in theatres in January 2022 amid the Covid restrictions, won the admiration of both media and audiences.

Directed by Vishal Venkat, the film starred Ashok Selvan, Reyaa, Manikandan, Abi Hassan, Anju Kurian, Praveen Raja, Rythvika, Nasser, K.S. Ravikumar, Ilavarasu, Bhanu Priya, and Anupama Kumar in pivotal roles. The film is now gearing up for a theatrical re-release.

Leading multiplex chain PVR Cinemas will be re-releasing 'Sila Nerangalil Sila Manidhargal' across theatres in Tamil Nadu on September 19. Being a film that touches the heart and speaks the language of the people, AR Entertainment, Trident Arts and PVR Cinemas are confident that it will once again receive overwhelming love from the audience.

With music composed by Radhan, cinematography by Meyyendiran K, and editing by Prasanna G.K, the film carried dialogues written by Manikandan K. Art direction was handled by A. Felix Raja and Manoj Kumar.

Choreography: Dinesh and Sri Krish; Lyrics: Snekan, RJ Vijay, Mathevan, Raakendu Mouli & MC Chetan; Costume Designers: Priya Harie & Priya Karan; Sound Effects & Design: Suren G & Alagiyakoothan;.DI: Sethu Selvam; VFX: Aksha Studios; PRO: Nikil Murukan; Publicity Designs: NTalkies; Stills: Chandru; Subtitles: Rekhs.

Produced by AR Entertainment and Trident Arts, the much-acclaimed 'Sila Nerangalil Sila Manidhargal' will be re-released by PVR Cinemas across theatres in Tamil Nadu on September 19.