தளபதி 64 படப்பிடிப்புக்கு தடை.. அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

தளபதி 64 படப்பிடிப்புக்கு தடை.. அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

பிகில் திரைப்பட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிவடைந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி சென்ற படக்குழுவால் தற்போது படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரிப்பு காரணமாக அதன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற தளபதி 64 படக்குழுவினரும் அதன்காரணமாக தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

கல்லூரி பேராசிரியர் வேடத்தில் தளபதி விஜய் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இசையமைப்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கிறது.