“18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும்” - நீதிபதி அதிரடி தீர்ப்பு

“18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும்” - நீதிபதி அதிரடி தீர்ப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து "18 MLA க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும்" என அதிரடி தீர்ப்பை வழங்கினார்.