January 11,2017
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு நடிகர் சிம்பு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார். இந்நிலையில், இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர். "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை மாலை 5 மணிக்கு கறுப்பு சட்டை அணிந்து எனது வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் 10 நிமிடங்கள் அவரவர் வீட்டு வாசலில் அமைதியாக நின்று போராட்டம் நடத்துங்கள். இதற்காக என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது வருந்ததக்கது" என அவர் தெரிவித்தார்.