ad11

விஜய் எனக்கு உதவி செய்தார்: சிரஞ்சீவி

January 12,2017  

Actor Vijay helped me says Chiranjeevi

தெலுங்கு பட உலகின் மெகா ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி 10 வருடங்கள் பின்பு தெலுங்கில் ‘கைதி எண் 150’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்து இருக்கிறார்.

மீண்டும் நடிக்க வந்தது குறித்து சிரஞ்சீவி நிருபர்களுக்கு கூறியதாவது:

“அரசியலுக்கு வந்த பிறகு வயது முதிர்ச்சியால் இனிமேல் சினிமா நமக்கு சரிபட்டு வராது என்று கருதி அதை விட்டு விலகி இருந்தேன். ஆனால் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.

அவர்கள் இருவரின் வற்புறுத்தல் காரணமாக தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் தயாரித்து நடிக்க முடிவு எடுத்தேன். அந்த படத்தின் தெலுங்கு உரிமை எனக்கு கிடைக்க விஜய் உதவி செய்தார்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆலோசனைகளை ஏற்று நடித்து படமும் இப்போது திரைக்கு வந்துவிட்டது. மீண்டும் நான் நடிக்க வந்ததில் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.