ad11

ஃபேஸ்புக் லைவில் வெளியானது "பைரவா" திரைப்படம்!

January 12,2017  

Bairavaa leaks online before its release
இளையதளபதி விஜய் நடித்துள்ள "பைரவா" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது...

இளையதளபதி விஜய் நடித்துள்ள "பைரவா" திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. இந்நிலையில் பைரவா படத்தின் திருட்டு வீடியோ ஃபேஸ்புக் லைவில் வெளியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் நேற்று "பைரவா" படத்தின் ப்ரீமியர் கட்சி திரையிடப்பட்டது. அப்போது தான் யாரோ படத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக் லைவில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே ஃபேஸ்புக் லைவில் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து திரையுலக கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை மகிழ்விக்க ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களும் பல சவால்களை எதிர்கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கின்றனர். எனவே ரசிகர்கள் திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்தால் தான் திரையுலகம் மற்றும் அதை சார்ந்து வாழும் கலைஞர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.