ad11

ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டு கொண்டாட்டம் "ஐடியல் டிரிம்ஸ்"

February 08,2017  

Ideal Dreams a musical tribute to AR Rahman

கனடா நாட்டில் டொரண்டோ நகரில் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் அமைப்பின் சார்பில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் வகையிலான "ஐடியல் டிரிம்ஸ்" கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை தனது தனித்துவமான இசையினால் மகிழ்வித்த அந்த கலைஞனை சிறப்பு செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிப்ரவரி 4ம் தேதி சோனி சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சிறந்த கலைஞர்கள், ரகுமானின் விருது பெற்ற இசையினை பாடல்கள், நடனம் மூலம், அவரது முன்னிலையில் அரங்கத்தில் வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டனர்.

குறிப்பாக மேஸ்ட்ரோ கிறிஸ்டியன் அலெக்சாண்டரின் கின்டர்ட் ஸ்பிரிட்ஸ் ஆர்கெஸ்டா குழுவினர், ரால்ப் பிரான்சிஸ் இசைக்குழு, ஓ 'நீல் ஜெரால்ட் டொனால்ட் குழுவினர் தங்கள் தலைமையில் பழமையும், புதுமையும் கலந்து இடையிடையே உணர்ச்சி ததும்ப பேசி ஏ.ஆர். ரகுமானின் பாடல்களை புதுவகையில் வடித்தெடுத்து வழங்கினர்.

பொருளாதார பின்தங்கிய குழந்தைகளுக்கு இணையற்ற இசை பயிற்சி அளிக்கவும், அவர்கள் உலக மேடையில் தோன்றுவதற்கான வாய்ப்பை அளிக்கவும் பொருளாதார ரீதியில் உதவி வரும் ஏ.ஆர். ரகுமான் பவுன்டேஷனுக்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு புதுவகையான அனுபவம் அளித்து என்றால் அது மிகையாகாது.