ad11

இவன் தந்திரன் - விமர்சனம்

July 07,2017  

Ivan Thanthiran Movie Review

"பெரிய நிறுவனங்களின் பிராண்டட் பொருட்களை டூப்ளிகேட்டாகத் தயாரித்து திருட்டுத்தனமாக மார்கெட்டில் விற்கும் இருவர், இன்ஜினியரிங் கல்லூரிகளிடமிருந்து பல நூறுகோடி சுருட்டி மாணவர்களின் வயிற்றில் அடிக்கும் அமைச்சரை அசிங்கப்படுத்தி அவர் ஆட்டையைப் போட்ட பணத்தையும் அடித்துப் பிடுங்கும் கருவோடும் , கதையோடும் கெளதம் கார்த்திக் -ஷ்ரதா ஜோடி நடிப்பில் உருவாகி வந்திருக்கும் படமே "இவன் தந்திரன்".

'மசாலா பிக்ஸ் & எம்.கே.ஆர்.பி புரடக்ஷன்ஸ்' பேனரில் ., ., ,ஆர்.கண்ணனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ., வந்திருக்கும் இப்படத்தை ஜகதல பிரதாபர் -தனஞ்ஜெயன் தனது, கிரியேட்டீவ் எண்டர்டெயின்மென்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேனரில், வெளியீடு செய்திருக்கிறார்.

"வேலை செய்த காசை வாங்காமல் விட மாட்டேன் .." எனும் கோட்பாடுயடைய போராளியாக கதைப்படி., என்ஜினியரிங் படிப்பை முழுதாக முடிக்காமல் , எஸ்' ஆகி, ரிச்சி ஸ்ட்ரீட்டில் , கடை போட்டு , பெரிய பிராண்டட் நிறுவனங்களின் செல்போன்கள் , லேப்டாப்கள் ....உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்களின் ஒரிஜினல் மாதிரியே டூப்ளிகேட் தயார் செய்து விற்பனை செய்யும் உத்தமராக கெளதம் கார்த்திக் செம கச்சிதம் .

ஆனாலும் , நாயகர் கெளதம் , நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத், தன்னிடம் வாங்கிய டூப்ளிகேட் லேப்டாப் ரிப்பேர் ஆனதும் அதை ., மாற்றித்தர மனம் இல்லாத கெளதம் கார்த்திக்., திடீரென அவர் மீது காதலில் விழுவது லாஜிக்காக இடிக்கிறது.

ஆர்.ஜே. பாலாஜியும்., அதே தொழிலில் .,கெளதம் கார்த்திக்கு உதவியாக அவரையே மிஞ்சுகிறார்.

அதிலும், ஆர்.ஜே. பாலாஜி , காண்டம் பற்றியும் கண்டது பற்றியும் பேசி குடும்பத்துடன் வந்திருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் ., "ஒலா, ஊப்பர் ஆட்டோக்கள் ... வந்தப்புறம் சவாரி கம்மி ஆச்சுல்ல முன்னாடியே மீட்டர் போட்டிருந்தா நாங்களும் உங்களை சப்போர்ட் பண்ணியிருப்போம் ...." என அடவடி ,ஆட்டோக் காரர்களுக்கு சூடு வைப்பது மாதிரியான சீன்களில் தியேட்டர் கைத்தட்டல் மற்றும் விசில் சப்தத்தில் திமிலோகப்படுகிறது. அதே மாதிரி ., ஹீரோவையும் தாண்டி., இவர் , "ஹேராம் பட ஹீரோயின் உதடு மாதிரி ஆயிடுச்சுடா ..." என்பதில் தொடங்கி , "பாகிஸ்தான் பக்கத்துல பத்து கிரவுண்ட் வாங்கிப் போட்டு, நமீதா, சினேகாவை விட்டு இன்ஜினியரிங் காலேஜ் திறந்து., கோடி கோடியாய் பணம் பண்ணும் கல்லூரி முதலாளிகளுக்கு செம ஆப்பு மச்சி...." என்பது வரை ., மொத்தப் படத்தையும் மூச்சு முட்டத் தன் தோளில் தூக்கி சுமக்க முயன்றிருக்கிறார். சபாஷ்!

கதாநாயகி ஆஷா சுப்ரமணியமாக ஷ்ரதா ஸ்ரீநாத், செம ஹோம்லி குல்கந்து! கவர்ந்திழுக்கும் கண்களும், வசீகர உடல் வாகுமாக ரசிகனை வசீகரிக்கிறார்.. ஆனாலும் , கதாநாயகனின் காதலை இங்கு கெளதம் கார்த்தி முன் ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்கா போகும் கனவோடு பெங்களூர் நேர்முகத் தேர்விற்குப் போய் விட்டு ., இண்டர்வியூ அதிகாரிகள் முன் கெளதம் பேசிய காதல் டயலாக்குகளை பேசி உணர்ச்சிவசப்பட்டு நாயகரின் காதலுக்காக மீண்டும் ஊர் திரும்பி., நாயகி நாயகர் மீது காதல் வயப்படுவது டிராமாவாக 'டல் 'அடிக்கிறது .

மற்றபடி, அமைச்சரின் அடியாள் பரத்ரெட்டி, மத்திய அமைச்சர் தேவராஜாக., சூப்பர் சுப்பராயன், அவரது வலது கையாக வந்து சூப்பர் சுப்பு கையாலேயே சாகும் அவரது மைத்துனர் ஸ்டன்ட்ஸ் சில்வா, அண்ணா யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்டாக, நாயக நண்பர்களின் சீனியராக வரும் கோபி, முருகன் - ஸ்ரீ விக்னேஷ், கல்லூரி தாளாளர் - வெங்கட், ஆகிய நட்சத்திர பட்டாளம் மெத்த பேரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

செல்வின் படத்தொகுப்பு கதைக்கேற்ற பக்கா தொகுப்பு. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் இரண்டு பாடல் காட்சிகளில் பாண்டிச்சேரியும் , இன்னும் சில படக்காட்சிகளில் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் செட்டும் பிரமாண்டம் .

எஸ். எஸ். தமனின் இசையில் "டிகாலிட்டி ... ", "என்ன மிதக்க விட்ட , ...." , "இவன் தந்திரன் ... " உள்ளிட்ட பாடல்களில் . குறையொன்றுமில்லை .பின்னணி இசையும் டபுள் ஒகே.

ஆர்.கண்ணன் தனது எழுத்து , இயக்கத்தில்., இன்ஜினியரிங் படிப்பை, ஐ.டி ஜாப்பை, சில சீன்களில் நக்கலடிப் பதும்., பின் வக்காலத்து வாங்குவதுமாக ரொம்பவே குழம்பி, குழப்பிருப்பதும் ., ஹீரோ .,யாருக்கும் தெரியாத சைஸில், நூறு ரூபாய் நோட்டில் ஜீபிஆர் எஸ் வைத்து., அதை வைத்து , பழசுக்கு புதுசு என நோட்டு மாத்த அவர் ஐநூறு கோடிக்கு மேல் எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயத்தில், அந்த ஊழல் அமைச்சரின் அத்தனை பணத்தையும் கைப்பற்றும் லாஜிக் இல்லாத மேஜிக் கதையும், பெரும் பலவீனம்.

மேலும், இன்ஜினியரிங் படிப்பை முடிக்காமலேயே, எல்லாம் தெரிந்த ரிவர்ஸ் இன்ஜினியர் கெளதம் கார்த்திக்கும், அவரை விட அதிகம் தெரிந்த ஆர்.ஜே.பாலாஜியும் அமைச்சர் வீட்டில் தங்களது சர்க்யூட் காமிராவை முடுக்கும் போது அவரைப் பற்றி அவதூறாக பேசி அந்த காமிரா, வாயிலாகவே வலிய வம்பில் மாட்டிக் கொள்வது மாதிரியாக அடுத்தடுத்து படம் முழுக்க வரும் நம்ப முடியாத லாஜிக் இல்லாத மேஜிக் காட்சிகளும், இப்படத்தின் மீதான நம்பகத்தன்மையை குழி தோண்டி புதைத்து விட்டு, நாடகத்தன்மையை கூட்டி காட்டுகிறது பாவம்!

எனவே ., "இவன்தந்திரன்' - 'ஆங்காங்கே சற்றே , குறைகிறான்' என்றாலும்., 'எதோ சாதித்திருக்கிறான்!"