ad11

"மெர்சல்- சினிமா விமர்சனம்"

October 19,2017  

Mersal Movie Review
அட்லீயும்....விஜய்யும்....மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல இடங்களில் கையில் எடுத்துக் கொண்டு "மெர்சல்" படத்தை எடுத்திருக்கிறார்கள். மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபட் டிருப்பவர்களை போலீஸ் அதிகாரி சத்யராஜ் தலைமையிலான தனிப்படை தேடுகிறது. இந்த தேடுதலில் விஜய்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்படுகிறார்..................

அட்லீயும்....விஜய்யும்....மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல இடங்களில் கையில் எடுத்துக் கொண்டு "மெர்சல்" படத்தை எடுத்திருக்கிறார்கள். மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபட் டிருப்பவர்களை போலீஸ் அதிகாரி சத்யராஜ் தலைமையிலான தனிப்படை தேடுகிறது. இந்த தேடுதலில் விஜய்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்படுகிறார்.

சத்யராஜின் விசாரணையில் விஜயிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. விஜய் மருத்துவத்துறையில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.

தந்தை, இரு மகன்கள் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். மகன் வேடங்களில் டாக்டர், மேஜிக் மேன் என இரண்டு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். இதில் டாக்டர் விஜய், மக்களுக்கு சேவை செய்வது, அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து கவர்ந்துள்ளார்.

மேஜிக்மேனாக வரும் விஜய், அவருக்கே உரிய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். தந்தை விஜயின் கதாபாத்திரம் மாஸாகவும், கிளாஸாகவும் உள்ளது. படத்தில் விஐய், நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் மருத்துவம் பற்றி இப்படத்தில் விஜய் அதிகம் பேசியுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். பல படங்களில் செய்திருப்பது போலவே விஜய் அப்படியே காப்பியடித்து நடித்திருக்கிறார். இரட்டை வேடம், மூன்று வேடம் என்றாலே ஒப்பனைகளிலும்,நடை,உடை,பாவணைகளிலும் வித்தியாசம் எதுவுமே விஜய் காட்டாதது சலிப்பாக இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வந்து, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமந்தா. தலைமை மருத்துவருக்கு உதவியாளராக வருகிறார் காஜல் அகர்வால். கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். தந்தை விஜய்க்கு மனைவியாக வரும் நித்யா மேனன், நடிப்பில் மிளிர்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.

மருத்துவ துறையில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்ந்துவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் காளிவெங்கட். வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையை செய்தாலும், அவர்களுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

பிளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. சமூக அக்கறையுடன் பல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். ஸ்டண்ட் காட்சிகள் யதார்த்தம் மீறாமல் இருப்பது சிறப்பு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு மட்டும் நல்ல தீபாவளி விருந்து.....!!!