ad11

மேல்நாட்டு மருமகன்- சினிமா விமர்சனம்

February 26,2018  

Melnaattu Marumagan Tamil Movie Review

வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழும் நாயகனின் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.எஸ். உள்ளூர் கைஃட்டாக தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் ராஜ்கமல். வெளிநாட்டில் இருந்து வரும் நாயகி ஆண்ட்ரியானாவுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வாய்ப்பு ராஜ் கமலுக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் எப்படியாவது மேல்நாட்டு மருமகனாக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? ராஜ்கமலின் ஆசை நிறைவேறியதா? ஆண்ட்ரியானாவை கரம்பிடித்தாரா? மேல்நாட்டு மருமகனானாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

ஒரு சுற்றுலா கைஃயிடாக ராஜ்கமல், கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி ஆண்ட்ரியானாவை, இவர் தான் நாயகி என்று நம்ப வைக்க ரொம்பவே போராடியிருக்கிறார்கள். வெளிநாட்டு பெண்ணாக வரும் ஆண்ட்ரியானாவுக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. லொள்ளு சபா மனோகர், முத்துகாளை உள்ளிட்ட மற்ற உதவி கதாபாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றனர். வி.கிஷோர் குமார் இசையில் இசை, கே.கவுதம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு...பரவாயில்லை.

கெத்து கம்மியான மருமகன்.