அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி நீ

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, அதன்படி வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்தீபன், பாப்புலர் முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதே போல் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உட்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.