பொறுக்கிஸ் இசை வெளியீட்டு விழாவுக்கு நாசரை அழைத்த ராதாரவி..!

பொறுக்கிஸ் இசை வெளியீட்டு விழாவுக்கு நாசரை அழைத்த ராதாரவி..!

அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!

"இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல" ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..!

"ராதாரவி சும்மாவே ஆடுவார்.. சலங்கையும் கட்டிவிட்டால்..?" ; சுரேஷ் காமாட்சி பெருமிதம்..!

"பஸ்பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள்" ; இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..!

நாங்கள் பொறுக்கிகள் தான்" ; பொறுக்கிஸ் விழாவில் பொங்கிய பியூஸ் மனுஷ்..!

சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் 'பொறுக்கிஸ்' டைட்டில் வைத்த இயக்குநர் ..!

"வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என சொல்லக்கூடாது" ; சுரேஷ் காமாட்சி

"எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை" ; சுரேஷ் காமாட்சி

KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் 'பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே 'அல்ல நாங்கள்' என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.

பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S 'பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..

இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, " நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.

தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்" எனக் கூறினார்

இயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, "என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.

நமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.

முன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, " ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு