துப்பாக்கிச் சூடு விவகாரம்: சின்னத்திரை நடிகை மீது வழக்கு பதிவு

துப்பாக்கிச் சூடு விவகாரம்: சின்னத்திரை நடிகை மீது வழக்கு பதிவு
https://www.youtube.com/embed/OPUFZsHFlOE

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல்துறை சீருடை அணிந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சின்னத்திரை நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலானி, காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை என்றும் திட்டமிட்டு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். முதலில் ஒரு காவல் அதிகாரி தான் இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் தான் பேசியது காவல் அதிகாரி இல்லை, சின்னத்திரை நடிகை என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Anti sterlite Protest police case filed against Serial actress