மீண்டும் மீண்டும் உருவாகக் கூடிய ஒரு வகை எலும்புக் கட்டியை நீக்கி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

மீண்டும் மீண்டும் உருவாகக் கூடிய ஒரு வகை எலும்புக் கட்டியை நீக்கி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

சென்னை: ஆசியாவின் மிக நம்பகமான மருத்துவமனை குழுமங்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் கணுக்காலில் கிரிக்கெட் பந்து அளவில் இருந்த டெஸ்மோபிளாஸ் டிக்ஃபைப்ரோமா கட்டியை வெற்றிகரமாக முழுவதுமாக அகற்றியுள்ளனர். காலை எடுப்பதற்கு பதிலாக அந்த கட்டியை மட்டும் அகற்றி அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு,  ரத்தநாள  மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.

டெஸ்மோ பிளாஸ்டிக்ஃபைப்ரோமா என்பது மிக அரிய வகை கட்டியாகும். இது மிகத் தீவிரமானது. டெஸ்மோ பிளாஸ்டிக்ஃபைப்ரோமா மற்ற இழை மகட்டிகளை விட வேறுபாடானது, அது மிக மெதுவாகவே வளரும். தாடை எலும்பு மற்றும் கணுக்கால்களில் தான் இது அதிகமாகவளரும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் அது எலும்பைச்சிதைத்து விடும். மேலும் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் அது மீண்டும் மீண்டும் வளரும் தன்மை உடையது.

ரிஃபாத் இக்பால் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இடதுகாலில் வீக்கத்துடன் நடக்க முடியாத நிலையில் அழைத்து வரப்பட்டார். டெஸ்மோபிளாஸ்டிக்ஃபைப்ரோமா பாதிக்கப்பட்ட ரிஃபாத் இக்பால் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அங்கெல்லாம் காலை அகற்றவேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த கட்டி மிக சிக்கலான நிலையில் இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. சென்னை அப்பல்லோ மருத்துவனையின் மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் கோசிகன், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் டாக்டர் கண்ணன் பிரேமா, டாக்டர்ச ஷிபூஷண், நோய்கண்டறியும் நிபுணர் டாக்டர் அசோக் பரமேஸ்வரன் ஆகியோர் அவருக்கு சிறந்த சிகிச்சை அளித்து அவரது கால்களை காத்துள்ளனர்.

இந்தநடைமுறை குறித்து மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் கோசிகன் கூறுகையில், “டெஸ்மோபிளாஸ்டிக்ஃபைப்ரோமா என்பது மிக அரிதான கடுமையான கட்டியாகும். எலும்புக்கட்டிகளில் 0.06 சதவீதம் மட்டுமே இந்த நோய்ஏற்படும். இந்த நோயாளிக்கு கிரிக்கெட் பந்து அளவிலான கட்டியை அகற்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அவரதுகால்களை எங்களது குழுகாத்துள்ளது. எலும்புகள் மறுவளர்ச்சி மருந்துகள் கொடுக்கப்பட்டு அவரது எலும்புகள் வளர வகை செய்யப்பட்டுள்ளது. எங்களது முயற்சி வெற்றி அடைந்து இப்போது அந்த நபர் யாரின் துணையும் இ்ன்றி தனியாக நடக்கிறார்.” என்றார்.

அந்த நோயாளி இப்போது நல்ல நிலையில் இருப்பதுடன் நடக்கவும் செய்கிறார். நோயாளியும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது எந்தத்தடையும் இன்றி அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறார்.