திருநெல்வேலியில் நடைபெற்ற 'அறமுடைத்த கொம்பு' இசை வெளியீடு.!

திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் 'நெல்லை கீதம்' ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய 'அறமுடைத்த கொம்பு' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட  பிரபல பின்னணி  பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அறமுடைத்த கொம்பு திரைப்படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன்,  கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா  மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும்ந பங்கு பெற்றனர்.