ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்த அசோக் லேலேண்ட்

ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்த அசோக் லேலேண்ட்

சென்னை, ஜூலை, 12:- 2018:- ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலேண்ட் நிறுவனம் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் "டிரைவ் ட்ராக் பிளஸ்" [HPCL Drive Track Plus] program திட்டத்துடன் இணைந்து என் - தன் எரிபொருள் அட்டையை [’eN-Dhan’ fuel card] அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் எரிபொருளை சேமிப்பதற்காக இந்த அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வர்த்தகப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தீர்வுகளை கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான நல்ல மாற்றத்தை கொடுக்க இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு அசல் உபகரண உற்பத்தியாளரும் [original equipment manufacturer (OEM)] ஒரு ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனியும் [oil marketing company (OMC)] (ஓஇஎம்) (ஓஎம்சி - எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனம்) இணைந்து வடிவமைத்துள்ள இந்த அட்டையி்ன் மூலம் ஆண்டுக்கு ஒரு லாரிக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை எரிபொருள் செலவு சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் கன ரக வாகனப் பிரிவு [medium and heavy commercial vehicle (M&HCV)] வாடிக்கையாளர்களுக்கு இது பெரிய பயன் தரும்.

என்-தன் அட்டை [eN-Dhan cards] இலவசமாக வழங்கப்படுகிறது. இது நாட்டில் உள்ள அனைத்து அசோக் லேலேண்ட் டீலர் அலுவலகங்கள் மற்றும் ஹெச்பிசிஎல் எண்ணெய் நிலையங்களில் கிடைக்கும்.

அறிமுக விழாவில் அசோக் லேலேண்ட் மேலாண்மை இயக்குநர் விநோத் கே. தாசரி [Mr Vinod K. Dasari, Managing Director] பேசுகையில், "அசோக் லேலேண்ட்டின் பிராண்ட் ஆனது அதன் தயாரிப்புகளில் மட்டும் புதுமையானதாக இருப்பதில்லை. அது தரும் சேவைகள் மற்றும் தீர்வுகள், பயன்களிலும் புதுமையானதாக இருக்கிறது. ’ஆப்கி ஜீத், ஹமாரி ஜீத்’ [’Aapki Jeet, Hamari Jeet’]  அதாவது உங்கள் வெற்றி - எங்கள் வெற்றி என்ற எங்களது நிறுவனத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் எங்களது நிறுவன தயாரிப்புகள் அமைந்திருக்கும். எங்களது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான மற்றும் மிகவும் திறனுள்ளவற்றை வழங்குவதற்கான வாய்ப்புகளை நாங்கள் மதிப்பிட்டு ஆய்வு செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது இந்திய வாகனச் சந்தையில் ஒரு வணிக வாகனத்தின் வாழ்நாளில் எரிபொருள் செலவு மட்டும் 35 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உள்ளதாக எங்களது மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது. எரிபொருள் செலவு பெரிய செலவாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவை (டிசிஓ) [total cost of operations (TCO)] கட்டுப்படுத்தி செலவுகளைக் குறைத்து வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் எரிபொருள் அட்டைத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். சேமிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் வணிகம் வளர்ந்து லாபம் அதிகரிக்க உதவும். எரிபொருள் செலவு குறையும் அதே நேரம் இந்த அட்டையானது மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன் ஓட்டுநர்களுக்குக் காப்பீட்டுச் சலுகைகளையும் வழங்கும்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் சில்லரை வர்த்தகப் பிரிவின் செயல் இயக்குநர் ஜிஎஸ்வி பிரசாத்  [Shri G S V Prasad, Executive Director – Retail HPCL ] பேசுகையில், ஹெச்பிசிஎல் - அசோக் லேலேண்ட் நிறுவனத்துடனான கூட்டு முயற்சி என்பது சாதாரண வாடிக்கையாளர் - லாரி உரிமையாளருக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். வாகனத்தின் இயந்திர அடிப்பகுதியை [chassis]-ஐ அசோக் லேலேண்ட் நிறுவனத்திடமிருந்தும் எரி்பொருளை ஹெச்பிசிஎல் நிறுனத்திடம் இருந்தும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கானது இந்த திட்டம். வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக, ஒரு மிகப் பெரிய எரிபொருள் நிறுவனம் ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்." என்றார்.

"வாடிக்கையாளர்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் தரமா்ன எரிபொருள் மற்றும் லூப்ரிகண்ட் ஆயில்களை வழங்குவதன் மூலம் வாகனங்களின் சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்க முடியும் என்று ஹெச்பிசிஎல் உறுதியாக நம்புகிறது. இந்த கூட்டு ப்ராண்ட் அட்டையான என்-தன் அட்டை அனைத்து ஹெச்பிசிஎல் நிலையங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும். இதன் முன்னோடி நடவடிக்கையாக ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளையும் மத்திய அரசின் முன் முயற்சியான டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஏற்ப அட்டைகளே இல்லாத தளத்துக்கு அடுத்த கட்டமாக எடுத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். சில்லறை விற்பனையில் முன்னோடியாகத் திகழும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) இந்தியா முழுவதும் உள்ள தனது அனைத்து 15,1