திரைப்படத்திற்காக மொட்டை போட்ட அதர்வா

திரைப்படத்திற்காக மொட்டை போட்ட அதர்வா

அதர்வா "பூமராங்" என்ற படத்தில் நடத்து வருகிறார், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார், இவர்களுடன் இந்துஜா, சதீஷ், பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் உபேன் பட்டேல் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து வருகிறார், இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்ட போது ஒரு முக்கியமான காட்சிக்காக அதர்வா மொட்டை போட வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் எந்த வித தயக்கமும் இல்லாமல் சம்மதித்தார், கதைக்காக எந்த வித தியாகமும் செய்யும் நடிகர்களின் வரிசையில் அதர்வாவும் இருக்கிறார் என்றார்.