"பில்லா பாண்டி" - விமர்சனம்

"பில்லா பாண்டி" - விமர்சனம்

பில்லா படம் ரிலிஸ்க்கு பிறகு தன்னுடைய பெயரையே "பில்லா பாண்டி", என மாற்றிக்கொள்ளும் அளவிற்கு தீவிர அஜித் ரசிகனாக நடித்திருக்கிறார் ஆர்.கே. சுரேஷ், இவர் சாதாரண கட்டிட தொழிலாளி கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார், இவர் மாமன் மகளாக சாந்தினி மீது காதல் கொண்டுள்ளார், சாந்தினியும் ஆர்.கே. சுரேஷை காதலிக்கிறார், இந்துஜா பில்லா பாண்டியை ஒரு தலையாக காதலிக்கிறார். 

இந்நிலையில், இந்துஜா சந்தர்ப்ப சூழ்நிலையில் மனநிலை பாதித்த நிலைக்கு தள்ளப்படுகிறார், கடைசியில் அவருடைய மனநிலை சரியாகி விடுகிறது, இருந்தாலும் இத்தனை நாள் தான் மனநிலை பாதித்த நிலையில் இருந்தோம், இன்று ஒருநாள் மட்டும் பழைய நிலையிலேயே இருப்போம், நம் மாமன் நம் மனநிலை சரியில்லாமல் போன பொது எப்படியெல்லாம் அன்பாய் கவனித்துக்கொண்டார் என்பதை வாழ்ந்து உணரலாம் என்று முடிவெடுக்கிறார், திரைப்படத்தில் இந்த காட்சி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் கதாநாயகன் ஆர்.கே. சுரேஷ் இனியும் நாம் உயிரோடு இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பரோட்டாவில் விஷம் கலந்து சாப்பிட முடிவு செய்கிறார், இதையே இந்துஜாவிற்கும் தருகிறார், இந்துஜாவும் விஷம் கலந்தது தெரியாமல் சாப்பிடுகிறார், ஆனால் உண்மை தெரிந்த ஆர்.கே. சுரேஷ் கண்ணீர் மல்க விஷத்தை சாப்பிடுகிறார், அதன் பின் என்ன நடக்கிறது என்பதை வெள்ளித்திரையில் தான் பார்க்க வேண்டும்.

தயாரிப்பாளரான கே.கி.பிரபாத் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர். கதையில் குறிப்பிட்டு சொல்லும் படியான காட்சிகள் பல உண்டு, அதை நடிகர்கள் காட்சிக்கேற்ப தத்ரூபமாக நடித்துள்ளனர்.

கதாநாயகனாக ஆர்.கே சுரேஷை இப்படியும் நடிக்க வைக்க முடியும் என்பதை திரையில் காட்டி படம் சூப்பர் என்பதை நிருபித்திருக்கும் இயக்குனர் ராஜ் சேதுபதி பாராட்டுக்கூறியவர். -  செ.ப. சிவாஜி