தென்னிந்தியாவின் சினிமா தந்தை தமிழனுக்கு நூற்றாண்டு விழா

6-ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் இரண்டாம் நாள் தென்னிந்தியாவின் சினிமா தந்தை தமிழகத்தை சேர்ந்த நடராஜ முதலியார் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் 52 நாடுகளை சேர்ந்த அயலக தமிழர்கள் மற்றும் தென்னிந்திய திரை துறை சார்ந்த ஐந்து மாநிலத்தவரும் கலந்து கொள்ள உள்ளனர், இவ்நிகழ்வில் தமிழருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆவணபடம் வெளியீடு காண உள்ளது. அயல் நாட்டில் கலை, கலாச்சாரத்தையும், தமிழர்கள் அறியும் ஊடகமாக செயல்படும் சினிமா, அதை முன்னெடுத்து தமிழருக்கு விழா எடுப்பதில் அயலக தமிழர்களும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும் பெருமைபடுகிறது.