“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும்

“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும்

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி பரபரப்பு பேச்சு...!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு எதிராக போராடுவதுதான் பாரதிராஜாவின் வேலையா..? ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி ஆவேசம்..!

“மணல் அள்ளும் ஸ்லீப்பர்செல்கள் யார்” ; ‘காவிரி’ ஆல்பம் மூலம் உண்மையை உடைத்த இயக்குனர் ராகேஷ்..!

“யார் தலைவர் என தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்” ; அபிசரவணன் ஆதங்கம்..!

“போராட்டங்களை திசைதிருப்புவதன் பின்னணியில் சென்சார் போர்டு” ; இயக்குனர் மீரா கதிரவன் பகீர் குற்றச்சாட்டு..!

காவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..!

“விவசாயிகள் லாபம் பெற இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும்” ; இந்திரா புராடக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன்..!

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் பயணிக்கும்போது ஒருகாலத்தில் அங்கே பசுமையாக இருந்த நிலங்கள் இன்று வறண்டுபோய் கிடப்பதை பார்க்கும்போது, அந்தப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போதும் கூட அங்கே மண் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகேம் வைத்து படமாக்கும்போது அதை கல்லெறிந்து உடைத்தார்கள், ஸ்லீப்பர் செல்போல அந்தப்பகுதியில் சிலர் இருக்கிறார்கள். இதை யாருக்காக செய்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை.. ஆனால் தாங்கள் செய்வது தப்பு என அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. காவிரிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அது கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது, விவசாயிகளின் வலி, வேதனையை இந்த ஆல்பத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

நடிகர் அபிசரவணன் பேசும்போது, “நீட் தேர்வை எதிர்த்தோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியோ நம்மை பாதிக்கும் எந்த ஒரு விஷயம் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே சிலர் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். அவர்களும் நம்முடனேயே இருப்பவர்கள் தான். அப்படியானால் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்த நம்மை எது பிரிக்கிறது..? இதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.. ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதவரும் நம் பிள்ளைகள் சிரமப்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் உணர்வாளர்களுடன் சேர்ந்து உதவி செய்ய காத்திருந்தோம்.. ஆனால் ஒருவர் கூட வரவில்லை.. வந்தவர்கள் எல்லாம் வசதியானவர்கள்.. விமானத்தில் தேர்வெழுத வந்தவர்கள்.. அப்படியானால் ராஜஸ்தானில் தேர்வெழுத சென்ற தமிழர்கள் சிரமப்படுகிறார்கள் என தவறான தகவல்களை யார் எதற்காக பரப்புகிறார்கள்..? எங்களை திடீர் போராளிகள் போல சித்தரிக்கிறார்கள், போராடவில்லை என்றாலும் தயவுசெய்து எங்களை காயப்படுத்தாதீர்கள் இன்றுவரை யார் தலைவர் என்றே தெரியாமல் தானே போராடிக்கொண்டு இருக்கிறோம், அழைப்பவர்கள் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

அரபுநாட்டில் வசிக்கும் சமூக போராளியும், டெல்லியில் விவசாயிகள் போராடியபோது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பின்புலமாக இருந்து உதவி செய்தவருமான ரசூல் பேசும்போது, “அரபு நாடுகளில் பீட்சா, சவர்மா என பாஸ்ட் புட்களைத்தான் சாப்பிடுகின்றனர்.. ஒருகாலத்தில் அங்கேயும் விவசாயம் இருந்தது.. அவர்களும் நம்மைப்போல உணவை சாப்பிட்டவர்கள் தான்.. விவசாயம் அழிந்துபோனதால் இப்போது பாஸ்ட்புட்டுக்கு வந்துவிட்டது நிலைமை.. எதிர்காலத்தில் நமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிட கூடாது” என கூறினார்.

நடிகர் அரீஷ்குமார் பேசும்போது, “காவிரியில் தண்ணீரை நிறுத்திவிட்டால், நிலத்தை தரிசாக்கிவிட்டால் இங்கே தாங்கள் நினைத்ததை சுலபமாக நடத்திவிடலாம் என்றுதான் திட்டமிட்டு நம்ம