புகழ் பெற்ற R.K ஸ்டுடியோ விற்பனைக்கு வருகிறதா?

புகழ் பெற்ற R.K ஸ்டுடியோ விற்பனைக்கு வருகிறதா?

பிரபல நடிகர் ராஜ்கபூர் பல படங்களில் நடித்து கதை, திரைக்கதை, வசனம், இயக்கி நடித்துள்ளார், இவர் படங்களை தயாரிப்பதற்காகவே R.K புரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி பிரமாண்ட ஸ்டுடியோவையும் நிறுவினார்.

அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த படங்களில் நவ்ரவ், ஜனக் பாயல் பாஜே, ஆவாரா, தீன் பஞ்சே சார் ராஸ்தா, சங்கம், மேரே நாம் ஜோக்கர் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது.

நவ்ரவ், ஜனக் ஜனக் பாயல் பாஜே, ஆவாரா போன்ற படங்களில் உள்ள விஷயங்கள் பல தமிழில் படமாக்கி வெளிவந்துள்ளது. 

சங்கம் படம் ராஜ்கபூர், ராஜேந்திர குமார், வைஜேந்தி மாலா ஆகியோர் நடித்து முக்கோண காதலை வெளிப்படுத்தும் படமாக வெளிவந்தது, இப்படத்தில் ராஜ்கபூர், வைஜேந்தி மாலா இணைந்து நடித்த பாடல் காட்சி நயகரா நீர்விழ்ச்சியில் படமாக்கப்பட்டு வெளிவந்தது, பொதுவாக பாடல் காட்சி நயகரா நீர்வீழ்ச்சியில் பலர் படம் எடுத்து தமிழில் வெளிவந்திருக்கிறது. ஆனால் ராஜ்கபூர் போல் துள்ளியமாக 
இதுவரை யாரும் படமாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீன் பஞ்சே சார் ராஸ்கா படம், ஒரு கட்டிடத்தில் வசிக்கும் நான்கு குடும்பங்களின் வாழ்க்கை பின்னணியில் படமாக்கப்பட்டது. அதில் ஒரு குடும்பம் தமிழ் பேசும் குடும்பம். அதனால் படம் முழுக்க எல்லோரும் தமிழில் பேசுவது போல் படமாக்கப்பட்டது குருப்பிடத்தக்கது. மேரா நாம் ஜோக்கர் படத்தில் ராஜ்கபூருடன் பத்மினி இணைந்து நடித்தார், படம் முழுக்க ஒரு சர்க்கஸில் நடிக்கும் கோமாளி வேடமேற்று நடித்தார்.

இவர் நடிக்கும் படங்களில் நகைச்சுவை நிறைந்ததாக நடித்தாலும் சோக காட்சிகளிலும் நிறைவாக நடிப்பார், இப்படத்தில் பத்மினி ஒரு ஆண் போல் பேன்ட், சர்ட் அணிந்து நடித்தார், ஒரு காட்சியில் இருவருக்கும் கருத்துவேறுபாடு வரும், அந்த காட்சியில் பத்மினியின் சட்டையை ராஜ்கபூர் கிழித்துவிடுகிறார், அதனால் அந்த காட்சி பத்மினியின் மார்பகம் தெரிய படமாக்கப்பட்டு வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல படங்கள் தயாரித்து இருந்தாலும் ராஜ்கபூர் முதலில் நடித்த படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் படம் முழுக்க ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க அலையோ அலையென்று அலைவார். படம் நகைச்சுவையும் சோகமும் நிறைந்து நடித்து படம் பார்பவர்களின் மனதை கவர்ந்தார், ஒரு வேலை தமிழகம் பின்னாளில் இப்படி ஒரு நிலைக்கு வரும் என்பதை முன்கூட்டியே கணித்து தயாரித்தார் போல இருந்ததும் குறுப்பிடத்தக்கது.

இப்படி இவருடைய படங்கள் இவருடைய ஸ்டுடியோவிலும், வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டது இப்போது வருத்தக்தக்க செய்திகள் இரண்டு வெளிவந்துள்ளது, அதில் ஒன்று அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி R.K ஸ்டுடியோவை விற்பது என்று முடிவெடுத்துள்ளார்.

அடுத்து ராஜ்கபூர் மனைவி கிருஷ்ணா மல்ஹோத்ரா சமீபத்தில் காலமானார். இவர் சமீபகாலமாக இதய அடைப்பு ஏற்பட்டு, 87 வயதில் காலமானார், இவருக்கு ரன்தீர்கபூர், ரிஷிகபூர், ராஜீவ் கபூர் என்ற மூன்று மகன்களும் ரீட்டு கபூர், ரீமா கபூர் என்ற இரண்டு மகள்களும் பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது - பி. சிவாஜி.