விஷாலின் 'கதகளி' விமர்சனம்

விஷாலின் 'கதகளி' விமர்சனம்
Kathakali Movie Review

நடிகர்: விஷால், கேத்தரின் தெரசா, மைம் கோபி, மதுசூதனன்

இயக்குனர்: பாண்டிராஜ்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்

இசை: ஆதி

கதாநாயகன் விஷால், தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். உயிருக்கு பயப்படும் காட்சிகளில் அதிக பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கமான ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.

நாயகியான கேத்தரின் தெரசா முந்தைய படத்தை விட இந்த படத்தில் உடல் எடையை கூட்டி குண்டாகியிருக்கிறார். இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இவருக்கும் விஷாலுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.

விஷாலுக்கு அண்ணனாக வரும் மைம் கோபி, பாசமிகு அண்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விஷாலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பரிதவிக்கும்போது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் மதுசூதனன் சிரித்து சிரித்து பயமுறுத்தியிருக்கிறார். முதல் பாதியில் மட்டுமே வந்தாலும், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

தன்னுடைய வழக்கமான கதைகளத்தில் இருந்து மாறுபட்டு அக்‌ஷன் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். விறுவிறுப்பான இரண்டாம் பாதி திரைக்கதை, படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை நகர்கிறது.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதியில் இடம் பெறும் காட்சிகள் இருட்டிலேயே அமைந்திருக்கின்றன. அதை அவரது கேமரா கண்கள் அழகாக படம் பிடித்திருக்கின்றன. ஆதி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

Kathakali Movie Review