"மாரி 2" - விமர்சனம்

"மாரி 2" - விமர்சனம்

மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது "மாரி 2", தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

ரோபோ சங்கர் மற்றும் வினோத் அகிய இரு நண்பர்களுடன் ஜாலியான டானாக வலம் வரும் தனுஷை பழிவாங்குவதற்காக பகையுடன் காத்திருக்கிறார் வில்லன் டோவினோ தாமாஸ், இதன் முதல்கட்டமாக தனுஷின் நண்பனான கிருஷ்ணாவை அவரிடம் இருந்து பிரிக்கிறார், மேலும் தனுஷையும் தன்னுடன் இருப்பவர்களையும் கொல்ல துடிக்கும் வில்லன் டோவினோ தாமஸிடம் இருந்து தனுஷ் தப்பினாரா? தன்னுடன் இருப்பவர்களை தனுஷ் காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் கதை.

தனுஷ் முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் இன்னும் விறுவிறுப்பாக நடித்துள்ளார், காதல், ஆக்ஷன், டான்ஸ் என கலக்கியுள்ளார், சாய் பல்லவி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது. வில்லனாக வரும் டெவினோ தாமஸ் மிரட்டலாக நடித்துள்ளார். கிருஷ்ணா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் கொடுத்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். முதல் பாகத்தில் படு வேகமாக செல்லும் திரைக்கதை இடைவேளை பின் வேறு ட்ராக்கில் செல்கிறது, இருப்பினும் ரசிக்கும்படியாக திரைப்படத்தை இயக்கியுள்ள பாலாஜி மோகனுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் "மாரி 2" - அட்டகாசம்.