மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் twitter பக்கத்தில் "GANG" திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் twitter பக்கத்தில் "GANG" திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் twitter பக்கத்தில் "GANG" திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் twitter பக்கத்தில் "GANG" திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படம் நான்கு சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது. இது இயக்குனர் தீனதயாளனின் முதல் படமாகும்.  இவர் சாட்டை M.அன்பழகனின் உதவி இயக்குனர் ஆவார். இப்படத்தில் வளர்ந்து வரும் நடிகர் குணா ஹீரோவாக நடித்துள்ளார், இவர் தீரன், இரும்புத்திரை, கே.டி, காளி, தமிழ் படம் 2, ஹீரோ, விக்ரம் சமீபத்தில் வெளியான "THUGS" ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மும்பையை சேர்ந்த தாமினி தேவ்  ஹீரோயினாக அறிமுகமாகிறார். இசை டோனி பிரிட்டோ (கூர்மன், J.பேபி), படத்தொகுப்பு செஞ்சி மாதவன் (தில்லுக்கு துட்டு 2, இடியட்), ஒளிப்பதிவு பெருமாள் ஆவார்கள். இப்படம் பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். 

மக்கள் தொடர்பு திரு C.N.குமார்