மனுசனா நீ- சினிமா விமர்சனம்..!!

மனுசனா நீ- சினிமா விமர்சனம்..!!
Manusanaa Nee Tamil Movie Review

வித்தியாசமான கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஸாலி. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார். மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். அது ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். இதை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலித்து வருகிறார்கள். ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார்.

எப்படியாவது அந்த இடத்தை அடைவதற்காக பல சூழ்ச்சிகளை செய்கிறார் சுப்பு பஞ்சு. இதனால் கோபமடையும் ஆதர்ஷ், சுப்பு பஞ்சுவை தாக்க நினைக்கிறார். ஆனால், சுப்பு பஞ்சுவின் ஆட்களை ஆதர்ஷை அடித்து விடுகிறார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதர்ஷ்.. அங்கு, தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆதர்ஷுக்கு மருத்துவமனையின் டீன் கஸாலி ஒரு மருந்து செலுத்தி அனுப்புகிறார். பின்னர், ஆதர்ஷ் திடீர் என்று சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவருடைய ஆட்களை அடித்து நொறுக்குகிறார். சில நாட்களில் அவரது முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என்று போலீஸ் கண்டுபிடிக்கிறது. இறுதியில் கஸாலி என்ன மருந்து ஆதர்ஷின் உடம்பினுள் செலுத்தினார்? எதற்காக செலுத்தினார்? இளைஞர்கள் காணாமல் போவதற்கு போலீஸ் கண்டுபிடித்தார்களா? ஆதர்ஷும் அனுகிருஷ்ணாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம். அகரன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பல காட்சிகளில் விறுவிறுப்பே இல்லை ...ஸ்லோவாக காட்சிகள் நகருவது டைரக்க்ஷனின் குறைபாடுதான்..கஸாலி ஆங்கிலத்தில் பல இடங்களில் பேசி ஆங்கிலத்தை கடித்து..குதறுகிறார்.அழகாக தமிழிலேயே பேசியிருக்கலாம்..

மொத்தத்தில்..விருப்பம் இருந்தால் பார்க்கலாம்.

Manusanaa Nee Tamil Movie Review