’மெய்யழகன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மெய்யழகன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’மெய்யழகன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மெய்யழகன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

சொந்தங்களின் துரோகத்தால் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று, சென்னையில் குடியேறும் அரவிந்த்சாமியின் குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது. மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், உறவுகளின் உண்ணதத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள நேரிடும் பயணம் தான் ‘மெய்யழகன்’.

நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மூலம் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மக்கள் மனதில் மிக எளிதாக நுழைந்து விடுவார், அப்படி தான் மெய்யழகன் என்ற இளைஞராக பசை போட்டு ஒட்டிக்கொள்பவர், தனது நடிப்பு மூலமாக ரசிகர்களை பல இடங்களில் சிரிக்க வைத்து கண்கலங்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் அருள்மொழி என்ற வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சொந்த ஊர் மீது இருக்கும் ஈர்ப்பும் ,ஏக்கமும் தன் மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டுபவர், கார்த்தியிடம் சொல்லாமல் அவரை விட்டு விலகும் காட்சிகளில் நடிப்பில் தஞ்சை கோபூரம் போல் உயர்ந்து நிற்கிறார்.

கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதை எந்தவித குறையும் இன்றி செய்து மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது. இளையராஜா தன்னை சாடினாலும் தான் அவரது தீவிர ரசிகன் என்பதை கோவிந்த வசந்தா இந்த படத்திலும் நீரூபித்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், இயக்குநரை காட்டிலும் காட்சிகளை அதிகம் ரசித்திருக்கிறார் என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குநரின் கற்பனை எவ்வளவு நீளமாக இருந்தாலும், படம் பார்க்கும் பார்வையாளர்களின் பக்கம் இருந்து அதை பார்க்காமல், இயக்குநர் பக்கம் நின்று அவர் பார்த்திருப்பது படத்திற்கு சில இடங்களில் பலவீனமாக அமைந்திருக்கிறது.

’96’ திரைப்படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த இயக்குநர் சி.பிரேம்குமார், இதில் உறவுகளின் மேன்மை பற்றியும், மனிதம் பற்றியும் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்திருக்கிறார்.

இயக்குநர் சி.பிரேம்குமார் ஒரு இரவு பயணத்தின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதைக்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் மக்களை மனிதம் மூலம் இளைபாற வைத்திருப்பதோடு, படத்துடன் ஒன்றிவிட செய்து, சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநரின் உணர்வுப்பூர்வமான திரைக்கதைக்கு உயிரோட்டம்மளிக்கும் வகையில் பயணித்திருக்கும் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உறவுகளின் உண்ணதத்தையும், அன்பையும் நின்று கவனிப்பதோடு, அதில் நம்மையும் மெய் மறக்கச் செய்திருக்கும் இந்த ‘மெய்யழகன்’ படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் பிரேம்குமார், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.