திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா மரணம் - நடிகர் சங்கம் இரங்கல் !

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா மரணம் - நடிகர் சங்கம் இரங்கல் !
Nadigar Sangam Condolence

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா (74) உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் காலமானார். அவரது மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

"வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்கரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவர் நடிகர் வெள்ளை சுப்பையா. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்" என்று கூறியுள்ளது. - தென்னிந்திய நடிகர் சங்கம்.

Nadigar Sangam Condolence