நியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்

நியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்
News 7 Tamil Channel Special Pattimandram

சுதந்திரத்திற்கு பின்னும் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா..? வீழ்ச்சியா..? 

இதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும் இப்படி ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ந்டைபெற்றதில்லை  நம்முடைய எதிரியுடன் போர் தொடுக்கலாம்.. இல்லை போராட்டம் பண்ணலாம். ஆங்கிலேயராக இருந்தால் வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடத்தலாம் பண்ணலாம். விடுதலைப்போர் புரியலாம்.

ஆனால் நம்மை  நாமே ஆளக்கூடிய, சுதந்திரத்திற்கு பின்பான சூழ்நிலையில் நாம் போர் புரிய முடியாது.. நம்முடைய ஆட்களாக இருப்பதால் போராட்டம் மட்டுமே பண்ணலாம். உதாரணமாக சொல்லப்போனால் 1930ல் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. இன்றைக்கும் இந்திய மக்கள் முழுமைக்குமான உப்பு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது இந்த பட்டிமன்றத்தில் இடம்பெறுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு எதற்கெல்லாம் வெள்ளையனோடு போராடினோமோ அதேபோன்ற சூழ்நிலையில் நம் இன்றைக்கும் போராட வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருப்பதே ஆரோக்கியமானதா..? இப்படி போராட்டங்கள் தொடர்வது சுதந்திர நாட்டுக்கு வளர்ச்சியா..? வீழ்ச்சியா..?

முதலில் நாம் போராடியது சுதந்திர நாட்டிற்காக.. ஆனால் சுதந்திர நாட்டிற்குள்ளேயே போராட்டங்கள் தொடருமானால் இது இந்த நாடு பெற்ற சுதந்திரத்திற்கு ஆரோக்கியமான ஒன்றுதானா என இந்த பட்டிமன்றம் அலசுகிறது..

பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக பொறுப்பு வகிக்கிறார். நகைச்சுவைக்கு மோகனசுந்தரம் துணை நிற்க,  அபூர்வமான குறிப்புகளை சொல்லியிருக்கிறார் சாத்தம்மை பிரியா.. இவர்கள் தவிர அபிஷேக், மிர்ச்சி விஜய், ஊக்கப்படுத்தும் விதமான பேச்சாளர் சியாமளா பல அரிய கருத்துக்களை கூறியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் இதில் கலந்துகொண்டு இந்தி போராட்டம் தொடர்பான இன்னொரு பரிமாணத்தையும் முன்வைத்துள்ளார். வரும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  சிறப்பு  பட்டிமன்றம் ஒளிபரப்பப்படுகிறது .

News 7 Tamil Channel Special Pattimandram