சின்னத்திரையில் அறிமுகமாகும் பழைய கதாநாயகிகள்

சின்னத்திரையில் அறிமுகமாகும் பழைய கதாநாயகிகள்

1980-களில் வெள்ளித்திரையில் பிரகாசித்துக் கொண்டிருந்த பழைய கதாநாயகிகள் ஒவ்வொருவராக "சின்னத்திரை" தொடர்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே சின்னத்திரைக்குள் நுழைந்து விட்டார், தற்போது "வாணி ராணி" தொடரில் நடித்து வருகிறார். "அழகு" தொடரில் ரேவதி, "நாயகி" தொடரில் அம்பிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள், "வம்சம்" தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

சமீபத்தில், ,"கண்மணி" என்ற தொடரின் மூலம் பூர்ணிமா பாக்யராஜ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இவர்களைப்போல் ஓய்வு பெற்ற பழைய கதாநாயகிகள் பலர் "சின்னத்திரை", தொடர்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள், பழைய கதாநாயகிகள் அனைவரும் சின்னத்திரை தொடர்களில் அம்மா வேடங்கள் கொடுக்கப்படுகின்றன, கதாநாயகி வேடத்துக்கு மும்பை அழகிகளை கொண்டு வந்து விடுகிறார்கள், மும்பை அழகிகள் அதிக சம்பளம் கேட்டு அடம் பிடிப்பதில்லை. கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். நேரம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள், இது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு சவுகரியமாக இருக்கிறதாம்!