நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் ' பண்ணாடி '

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் ' பண்ணாடி '
http://entertainment.chennaipatrika.com/img/cinema/Pannadi-07-05-18/Pannadi.jpg

நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ' பண்ணாடி ' என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது .

முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார், வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா . பழநி வேலன். இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.

இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ்.

'பண்ணாடி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வருகிறது.

Pannadi Tamil movie handles with new subject