பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
Petrol Diesel price cut from Monday night

புது டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.17-க்கும், டீசல் ரூ.60.71-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.69.01-க்கும், டீசல் 58.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Petrol Diesel price cut from Monday night