தயாரிப்பாளர், இயக்குனராக அறிமுகமாகும் பிரபல பெண் நடன இயக்குனர்

தயாரிப்பாளர், இயக்குனராக அறிமுகமாகும் பிரபல பெண் நடன இயக்குனர்
Popular Dance Choreographer turns as Producer and director

எஸ். எஸ். ட்ரீம் கலர்ஸ் சார்பில் தனீஷ்பாபு வழங்க " நாதிரு தின்னா" திரைப்படம் உருவாகியுள்ளது.

புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகா ப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண்மாஸ்டர், 'வெள்ளரிக்கா' புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல், ஆகிய உணர்வுகளை மையக்கருவாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இளைஞர்களுக்காக உருவாகி உள்ள ஜாலியான படம் தான் " நாதிரு தின்னா".

கே. வி. மகாதேவன், ஷ்யாம்,வந்தேமாதரம், உபேந்திரகுமார், சக்ரி முதலான இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர்ராகி இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சி. எஸ். சாய்மணி கலையையும், ஆர். கேசவன் படத்தொகுப்பையும், ஸ்ரீதர் கேமராவையும், ரவி பெல்லூரு இணை தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

பாரதிராஜாவின் " பசும்பொன்" படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாலகிருஷ்ணா, ராம்சரண் படங்களில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, போஜ்பூரி, ஒரியா மொழி படங்களில் ஏறக்குறைய 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர் சொர்ணா. இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி நடனம் அமைத்து, தயாரித்து, தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.

இன்னொரு பெண் இயக்குனராக களத்திற்கு வந்துள்ளார் சொர்ணா.

Popular Dance Choreographer turns as Producer and director