பாப் பாடகரை மணக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா

பாப் பாடகரை மணக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா
Priyanka Chopra to marry Pop Singer Nick Jonas

முன்னாள் உலக அழகியும், தமிழில் நடிகர் விஜய்யுடன் "தமிழன்", திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவூட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்த இவர், தற்போது ஹாலிவுட் படங்கள், ஹாலிவுட் சீரியஸில் வருகிறார்.

பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியாகின, மேலும் நிக் ஜோனாஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

இந்தநிலையில், இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணத்தை அடுத்த மாதம் (ஜூலையில்) நடத்த இரு வீட்டு குடும்பத்தினரும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Priyanka Chopra to marry Pop Singer Nick Jonas