மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. 

மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜா’வுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு.’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் கலந்துகொண்டு,‘ 2021 ஆண்டு பாடலு’க்கான விருதினைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் அந்த விருதை அனைத்தும் பார்வைத்திறன் சவாலுள்ளவர்களுக்கு சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் ‘மாயோன்’ என்ற பெயரில் புதிய படமொன்றை தயாரித்து வரும் இந்நிறுவனம், அதனை கோடைக் காலத்தில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வைத்திறன் சவால் உள்ளவர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில், பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது- இதற்கு மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

இதனிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற மற்றொரு புதிய பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கு இணையவாசிகள் மற்றும் ரசிகர்களிடத்தில் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.