தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: ரஜின

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: ரஜின
Rajinikanth Arrives at Thoothukudi meets gunfire victims

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் மேலும் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்தித்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என கூறினார்.

ஆலையை திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது என்று கூறிய ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே" என்று அவர் கூறினார்.

Rajinikanth Arrives at Thoothukudi meets gunfire victims