ரஜினியின் "2.0" வசூல் சாதனை

ரஜினியின் "2.0" வசூல் சாதனை

ரஜினி நடித்த 2.0 திரைப்படம் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது, இந்நிலையில் திரைக்கு வந்த 4 நாட்களிலேயே 400 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை "2.0" நிகழ்த்தியுள்ளது.

ரஜினி நடித்த 2.0 படத்தை முதன் முறையாக 3D கேமராவில் ஷூட் செய்திருக்கிறார்கள், 4D சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒளியமைப்பை உருவாகியுள்ளார் ரசூல் பூங்குட்டி.

ஷங்கர் - ரஜினிகாந்த கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் உலகளவில் 10,500 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது, இதற்கு முன் "பாகுபலி 2" 9000-க்கும் அதிகமான தியேட்டரில் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்தது, அந்தச் சாதனையை "2.0" முறியடித்துள்ளது.

வட இந்தியாவில் மட்டும் 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள இந்த படம் ஆந்திரா, தெலுங்கனாவில் 1110 திரையரங்களிலும், தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 450, கர்நாடகாவில் 400 என இந்தியாவில் மட்டும் 7,800 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று பதிப்புகளையும் சேர்த்து 800 தியேட்டரில் வெளியிடப்பட்டுள்ளது, மலேசியாவில் 140 தியேட்டர்களில் "2.0" வெளியாகியுள்ளது, பிரிட்டனில் 297 தியேட்டரில் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் - சில் 350 திரையரங்குகளில் 2.0 திரையிடப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியா, நியூலாந்து உள்ளிட்ட இடங்களில் 155 தியேட்டரில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், "2.0" வசூலிலும் சாதனை படைத்துள்ளது, திரைக்கு வந்த நான்கு நாட்களில் மட்டும் (நவம்பர் 29 - டிசம்பர் 2) வரை உலகம் முழுவதிலும் ரூ. 400 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.