நிர்பயா பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC to deliver verdict on death penalty in Nirbhaya case Today

புது டெல்லி: கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, ஜோதி சிங் (நிர்பயா) என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி சிங், மேல் சிகிச்சைக்காக சிங்கபூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் இளங்குற்றவாளி என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார், இளங்குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இளம்குற்றவாளி தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டான். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில், தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

SC to deliver verdict on death penalty in Nirbhaya case Today