சர்கார் - விமர்சனம்

சர்கார் - விமர்சனம்

சர்கார் படம் இன்றைய சூழ்நிலையை அப்படியே பிரதிபலிக்கும் கதை தான். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பும் கதாநாயகனின் கதை. அவர் நாடு திரும்பி ஓட்டு போடுவதற்கு வருகிறார். ஆனால் அவருடைய ஒட்டை யாரோ கள்ள ஒட்டாக போட்டு விடுகிறார்கள், அதனால் அவர் கொதித்து எழுந்து யார் ஓட்டை போட்டார்கள் என்று கோட்டுக்கு போகிறார். இதனால் முதல்வராக வேண்டிய அக்கட்சியின் தலைவர் பழ.கருப்பையா முதல்வராக முடியாமல் திணறுகிறார்.

கார்ப்பரேட் மான்ஸ்டர் சுந்தர் ராமசாமியாக விஜய், கேரக்டர் புரிந்து அற்புதமாக நடித்து நல்ல பெயர் எடுக்கிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

வில்லியாக வரலட்சுமி சரத்குமார் அழகான வில்லியாக மிரட்டியிருக்கிறார், காமெடிக்கு யோகி பாபு பக்க பலம்.

பழ.கருப்பையா, ராதா ரவி, லிவிங்ஸ்டன், பிரேம், சிவசங்கர் மாஸ்டர் எல்லோரும் கேரக்டருக்கு ஏற்ப திறமையாக நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர் ரகுமான் இசை படத்திற்கு பலம், ஜெயமோகனின் வசனங்கள் அருமை.

மொத்தத்தில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "சர்கார்" திரைப்படம் "சூப்பர்"