சீமராஜா - திரைப்பட விமர்சனம்

சிங்கம்பட்டி சீமையின் ராஜ வம்ச வாரிசாக இருப்பவர் நெப்போலியன், இவருடைய வாரிசான சிவகார்த்திகேயன் பக்கத்து கிராமமான புளியம்பட்டியில் வசிக்கிறார். அந்த கிராமத்திலே வாழும் லால், சிம்ரன் விவசாயிகளின் நிலங்களை எல்லாம் பபிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். இதை எப்படி சமாளித்தி சிவகர்த்திகேயன் விவசாயிகளுக்கு தருகிறார் என்பது தான் கதை, மொத்தத்தில் இப்படம் ஒரு மசாலா கதையாக பின்னப்பட்டிருக்கிறது.
முற்பாதியில், சிவகார்த்திகேயன் வழக்கமான கதாநாயகனாகவும், பிற்பாதியில் ராஜா வேடமேற்று நடித்து ரசிகர்களை கவர்கிறார்.
நெப்போலியனை பொறுத்தவரை படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நெஞ்சில் நிற்பது போல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது, சூரி காமெடி படத்திற்கு பலம் தான். அதிலும் சிவகர்த்திகேயனுடன் இணைந்ததால் பூந்து விளையாடுகிறார்.
சமந்தாவை பொறுத்தவரை சிலம்ப ஆசிரியராக வந்து கிளைமாக்ஸில் பட்டையை கிளப்புகிறார். மற்றபடி படத்தில் வழக்கமான ரோல் தான். சிம்ரன் பாத்திரத்திற்கு ஏற்ற படி நடித்து பேர் வாங்குகிறார், இமானின் இசை படத்திற்கு பலம் தான். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் படம் முழுக்க அழகை அள்ளி விசுகிறது.
மொத்தத்தில், சீமராஜா பொன்ராம் இயக்கத்தில் "ஹாட்ரிக்" வெற்றிபெற்று ரசிகர்கள் விரும்பும் படமாக வந்துள்ளது.