ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க  விசாரணைக் கமிஷன் அமைக்கப்படு
TN CM Edappadi Palaniswami announces judicial probe into Jayalalithaa death

சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா உயிர் இழந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன.

எனவே, ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

தமிழக முதலமைச்சராக 6 முறை திறம்பட பணியாற்றிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர். அனைவரின் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ள அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. எனவே, அவரது சாதனைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான ‘வேதா நிலையம்’, அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

TN CM Edappadi Palaniswami announces judicial probe into Jayalalithaa death