உணர்வுப்பூர்வமான படைப்பான,  “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம், மிகச்சிறந்த இசையை உருவாக்கும் வாய்ப்பை தந்தது - இசையமைப்பாளர் சித்து குமார் !

இசையமைப்பாளர் சித்து குமார் இசையில், அவரது  ஒவ்வொரு இசை ஆல்பமும், இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, தொடர்  வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வகையில், கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இசை ஆல்பம் இசை காதலர்களிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் “சொந்தமுள்ள வீடு” பாடல் குடும்ப ரசிகர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவின் பெருமைகள் சொல்லும்,  விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ‘உங்கூடவே பொறக்கனும்’ பாடல்களை போல, பட்டி தொட்டியெங்கும் முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படம் 2021 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர்  சித்து குமார் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

இது குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் கூறியதாவது…
உண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. என் திரை வாழ்வு, மிக அதிர்ஷ்டம் மிகுந்தது. தொடர்ந்து உணர்வுப்பூர்வமான படங்களில் நான் பங்காற்றியுள்ளேன். ஆனால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை அதன் உச்சம் எனலாம். இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான பாடல்கள் கொண்டது. பாடலாசிரியர் சினேகன் மொத்த பாடல்களுக்கும் தனது அற்புத வரிகளால் ஆத்மாவை தந்துள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்திற்கு மிகச்சிறந்த இசையை உருவாக்குவதில் பெரும் சவாலை தந்தது. இயக்குநர் நந்தா பெரியசாமி தன் எழுத்தில், உருவாக்கக்தில் உணர்ச்சிபிழம்பான தருணங்களை திரையில் வடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும், அதில் நடித்துள்ள நடிகர்கள் அந்த காட்சிகளின் உணர்வை, தங்களது நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இவையெல்லாம் பார்த்த போது, இக்காட்சிகளுக்கு நியாயம் செய்யும் உண்மையான ஒரு இசையை,  எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. படத்தின் பல காட்சிகளில் என் வாழ்வையே நான் கண்டேன். இசைக்கு முன்பாகவே திரைப்படம் ஒரு முழு திரைக்காவியமாக இருந்தது. முழுப்பிரதிக்கு முன்பாக ஒரு படைப்பாளியால் இப்படி ஒரு தாக்கத்தை உருவாக்க முடியுமெனும்போது, இந்த படம் உண்மையில் அங்கேயே ஜெயித்து விட்டது.  ஆனந்தம் விளையாடும் வீடு ஒரு அழகான அனுபவமாக மறக்கமுடியாத திரை விருந்தாக இருக்கும். குடும்ப உறவுகளின் உன்னதங்களை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், ரொமான்ஸ், காமெடி கமர்சியல் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இந்நேரத்தில் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கும், தயாரிப்பாளர் P.ரங்கநாதன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய நட்சத்திரங்கள்  இணைந்து நடித்து, ஒரு குடும்ப திரைப்படம் திரைக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு முழுமையாக குடும்ப படமாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை Sri Vaari Film  சார்பில் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, "நமோ" நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, "நக்கலைட்" செல்லா "சூப்பர்குட்" சுப்ரமணி "V.J. கதிரவன், மௌனிகா, மைனா,சூசன், பிரியங்கா, மதுமிதா, "பருத்திவீரன்" சுஜாதா, "நக்கலைட்" தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும் பல நடசத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.