திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் நூற்றாண்டு விழா..!!

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் நூற்றாண்டு விழா..!!
http://entertainment.chennaipatrika.com/img/cinema/KV Mahadevan-03-05-18/KV Mahadevan.jpg

'தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் "திரை இசைத் திலகம் "கே.வி.மகாதேவன் அவர்களின் நூற்றாண்டு விழா, வருகிற 6-5-2018 ஞாயிறு அன்று சென்னை தி.நகரில் உள்ள சர் .பிட்டி தியாகராஜா ஹாலில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

விழாவின் துவக்கமாக "கீதாஞ்சலி இசைக் குழுவினர்கள் கே.வி.மகாதேவன் இசையமைத்த படங்களிலிருந்து பல பாடல்களைப் பாடுகிறார்கள். கே.வி. மகாதேவனுடன் பணிபுரிந்த இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் பலர் மேடையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக "இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சங்கர்-கணேஷ், புலமைப்பித்தன், பூவை.செங்குட்டுவன், முத்துலிங்கம், பிறைசூடன், சிவமணி, ஒய்.ஜி.மகேந்திரன், முராரி,...மற்றும் திரைஉலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்விழாவினை "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விசுவநாதன் ரசிகர்கள் அமைப்பினர்கள் (MMFA) நடத்துகிறார்கள்.

"திரை இசைத் திலகம் "கே.வி.மகாதேவன் வாழ்க்கைக் குறிப்பு:---

கே. வி. மகாதேவன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் 14-3-1918-இல் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.கே. வி. மகாதேவன்.

21-6-2001- இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்..

கே.வி.மகாதேவன் இசையில் பிரமிப்பை ஏற்படுத்திய பல படங்களில் குறிப்பிடத்தக்க சில படங்கள்...1963ல் வந்த காட்டுரோஜா, வானம்பாடி முதல் நவராத்திரி மற்றும் வேட்டைக்காரன் (1964),1965ல் இதயக்கமலம், திருவிளையாடல், மகாகவி காளிதாஸ், 1966ல் சரஸ்வதி சபதம், தனிப்பிறவி, 1967ல் அரசகட்டளை, கந்தன் கருணை, திருவருட்செல்வர், 1968ல் தில்லானா மோகனாம்பாள், 1969ல் அடிமைப்பெண், 1970ல் வியட்நாம் வீடு, 1971ல் ஆதிபராசக்தி, 1972ல் அன்னமிட்டகை, வசந்தமாளிகை, 1973ல் பட்டிக்காட்டுப் பொன்னையா, எங்கள் தங்கராஜா, 1974ல் வாணிராணி, 1975ல் பல்லாண்டு வாழ்க, 1976ல் உத்தமன், 1977ல் தாலியா சலங்கையா? வரை அவரின் இசைப்பதிவு பிரம்மாண்டம் அல்லது ஆழ்ந்த அழுத்தமான அதிர்வை திரையுலகில் ஏற்படுத்தியது. ஏராளமான விருதுகள், பட்டங்கள் பெற்ற இவருக்கு "திரை இசைத்திலகம் "என்ற பட்டமே நிலைத்து நின்றது..

Thirai Isai Thilagam K V Mahadevan Centenary celebration fucntion