"வட சென்னை" - சினிமா விமர்சனம்

"வட சென்னை" - சினிமா விமர்சனம்

வட சென்னையை அடிப்படை கதைக்களமாக வைத்து படைத்திருக்கும் படம் தான் "வட சென்னை", வடசென்னை என்றாலே கொலைகளம் நிறைந்து இருக்கும், இந்தப்படத்தில் ஆரம்பத்திலேயே கிஷோரும், சமுத்திரகனி ஆகியோர் இனைத்து கொலை காட்சியுடன் அடிதடி, வெட்டுக்குத்து, என்று கத்தியுடன் காட்சி ஆரம்பமாகிறது. இப்படி இணைந்து இருந்த கிஷோரும், சமுத்திரக்கனியும் தனி தனி குழுக்களாக பிரிந்து செயல்பட துவங்குகிறார்கள்.

இப்படத்தில் தனுஷ் கேரம் பிளேயராக நடித்து இருக்கிறார் சமுத்திரகனியுடன் ஏற்படும் மோதல் காரணமாக தனுஷ் சிறை செல்கிறார், தனுஷுடன் இணைந்து காதல் ஜோடியாக வளம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப நடித்து படம்பார்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

தனுஷை பொறுத்தவரை ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப மெருகேற்றி நடித்திருக்கிறார், சந்தோஷ் நாராயணின் இசையும், வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் தான்.

வடசென்னையை பொறுத்தவரை கதைகளம், வடசென்னையை பிரதிபலிப்பாக இருந்தாலும், அதில் போப் ஆண்டவர் வருகை, எம்.ஜி.ஆர் இறப்பு, ராஜிவ்காந்தியின் கொலை மற்றும் சாலை விரிவுபடுத்துதல் என்று பல விஷயங்களில் அரசியல்வாதிகளின் செயல்களை இணைந்து வழக்கமான படமாக இல்லாமல் சிறப்பு அம்சங்களுடன் வெற்றிமாறன் இயக்கி வடசென்னையை தன்னுடைய ஹேட்ரிக் வெற்றிப்படமாக்கி  இயக்கியுள்ளது  பாராட்டுக்குறியது.