வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்

வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்

பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதராக செயல்படுபவர்கள் குறித்தும் பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார், இதனால் சில பெண்கள் தங்கள் வாழ்கையில் ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை சின்மயியிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர், அவர்களின் அனுமதியோடு சின்மயியும் அவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

இதன் வரிசையில் கவிஞர் வைரமுத்து மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் நேற்று மாலை பாலியல் புகரை அளித்தார், அதில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நடிகர் ராதாரவி மீது இணையதள பத்திரிக்கையாளர் காவ்யா நக்‌ஷத்ரா என்பவர் தனது டிவிட்டரில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த டிவிட்டில் "வைரமுத்து தொடர்பான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதே மாதிரி ஒரு நிகழ்வு எனக்கும் நடிகர் ராதாரவியோடு ஏற்பட்டது. ஒரு வேலை சம்மந்தமாக அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்ற போது அவர் என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். வேலையை நல்லபடியாக செய்து முடி. நாம் பிறகு சந்திப்போம். நீயும் நல்லாத்தான் இருக்க ஃபிரண்ட்ஸோடு வராத தனியா வா". என்றார். அந்த வேலையை அதோடு நிறுத்தி விட்டேன்", என தெரிவித்துள்ளார்.