தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை, தலைவர் விஷால் அதிரடி கைது (வீடியோ)

தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை, தலைவர் விஷால் அதிரடி கைது (வீடியோ)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தை விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர்  பூட்டி விட்டார்கள். 

இந்த நிலையில் இன்று காலை அலுவலகம் வந்த விஷால் அலுவலகத்தை பூட்ட காவல்துறை எப்படி அனுமதித்தது என விஷால் கேட்டதால் ஏற்பட்ட சலசலப்பால் சங்க வாசலில் இருந்த போலீசாருக்கும் விஷாலுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வீடியோ :-  https://bit.ly/2A9vE71

இதையடுத்து விஷாலை போலீசார் கைது செய்து தி.நகரில் உள்ள தேவர் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.