ஏமாலி- சினிமா விமர்சனம்..!!

ஏமாலி- சினிமா விமர்சனம்..!!
Yemaali Tamil Movie Review

தற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்கை, காதல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் இயக்கியிருக்கும் வி.சி.துரைக்கு பாராட்டுக்கள். காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்பதை சொல்ல வந்திருக்கிறார்

பணக்கார வீட்டு பையனான நாயகன் சாம் ஜோன்சும், ஐ.டி.கம்பெனியில் வேலைபார்க்கும் நாயகி அதுல்யாவும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களது காதலில் திடீரென ஒரு சறுக்கல் வர இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர்.

காதலை பிரிந்ததையடுத்து சாம் அவரது நண்பர்களுக்கு விருந்து வைக்கிறார். அந்த பார்ட்டியில் சமுத்திரக்கனி, பால சரவணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை சாம் அவரது சமூக பக்கத்தில் வெளியிடுகிறார். அதனை பார்த்து கடுப்பாகிறார் அதுல்யா. இதையடுத்து சில நாட்களில் அதுல்யாவுக்கு போன் செய்கிறார் சாம். ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவளது மொபைல் நம்பர் வெயிட்டிங்கிலேயே இருப்பதால் அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் சாம், அதுல்யாவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதனை சமுத்திரக்கனியிடமும் சொல்கிறார். முதலில் சாமை தன்வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி. அது முடியாத நிலையில், சாம் வழியிலேயே சென்று அவனது மனநிலையை மாற்ற முடிவு செய்கிறார்.

போலீசில் சிக்காமல் எப்படி கொலை செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் திட்டம் போடுகின்றனர். அதற்காக கொலைக்கு பின்னர் போலீஸ் எப்படி எல்லாம் விசாரணை நடத்துவார்கள். அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்தும் போசிக்கின்றனர்.

கடைசியில் சமுத்திரக்கனியுடன் சேர்ந்து சாம், அதுல்யாவை கொன்றாரா? அல்லது சமுத்திரக்கனி, சாமின் மனை மாற்றினாரா? சாம் - அதுல்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார்.

காதல் தோல்வியால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதுல்யா கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். நாயகனுக்கு போட்டியாக, புகைப்பிடித்து நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி அவரது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார்.

ரோஷிணி, பால சரவணன், சிங்கம் புலி ஓகே...ரகம்தான். சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை உருவாக்கி இருந்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை அமையவில்லை.

சாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை வலுசேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் நம்மை `ஏமாலி' ஆக்கவில்லை,...பாஸ் மார்க்.

Yemaali Tamil Movie Review