"தளபதி 65" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்

"தளபதி 65" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தளபதி 65’ குறித்த தகவல்கள் நேற்று பல ஊடகங்களில் வெளியானது

’தளபதி’ 65 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் இந்த படம் அவரது பாணியில் சஸ்பென்ஸ் த்ரில் கலந்த கதை படம் என்றும் விஜய் நடிக்க இருக்கும் வித்தியாசமான படம் இந்தப் படம் என்பதால் பெரும் வரவேற்பை பெறும் என்றும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இதுகுறித்து விஜய் தரப்பினர் கூறும்போது ,தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையே இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றும் ’தளபதி 65’ குறித்து வெளியாகி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் கூறினர்.

இதுகுறித்து மகிழ்திருமேனி தரப்பினர் கூறியபோது ‘தளபதி 65’ படம் குறித்த தகவல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனால் அப்படி ஒரு படம் பண்ணுவதாக இருந்தால் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.